போலீஸ் கல்லூரியில் தாக்குதல்; விசாரணை ஆரம்பம்

ஜெம்போல்:

ஆயிர் ஈத்தாம் போலீஸ் பயிற்சி மையத்தில் (Pulapol) மூன்று வாரங்களாக பயிற்சி பெற்ற ஒருவரை அங்குள்ள ஒரு பெண் உட்பட இரண்டு போலீஸ் பயிற்சியாளர்கள் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நெகிரி செம்பிலானில் உள்ள 20 வயது போலீஸ் பயிற்சியாளர், 30 வயதிற்குட்பட்ட இரு மூத்த போலீஸ் பயிற்றுவிப்பாளர்களால் பல சந்தர்ப்பங்களில் அறைந்தது, உதைத்தது மற்றும் குத்தியதால் காயங்களுக்கு உள்ளானதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, குறித்த பயிற்சியாளர் ஆறு மாத அடிப்படை போலீஸ் பயிற்சியை மேற்கொள்ள குறித்த போலீஸ் கல்லூரிக்கு வந்ததாக அறியப்படுகிறது.

ஜெம்போல் துணைக் காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமட் ஹபீஸ் முஹமட் நோரைத் தொடர்பு கொண்டபோது, பயிற்சியில் இருந்து வெளியேறுவதாக கடிதம் அளித்து, பட்டப் படிப்பைத் தொடர கடந்த வாரம் மையத்தை விட்டு வெளியேறினார்.

மேலுக்கும் இந்த வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றார்.

முன்னதாக ஒரு பெண் பயிற்சியாளர், ஒரு கார்போரல், ஆகியோர் குறித்த பயிற்சியாளரை பலமுறை அறைந்த பிறகு ஒரு நாற்காலியை வீசினார்கள் என்றும், மற்றொரு சந்தர்ப்பத்தில், மற்றொரு பயிற்சியாளர் அவரை வயிற்றில் குத்தியதாகவும் அவரின் தாயார் செப்டம்பர் 8ஆம் தேதி போலீசில் புகார் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here