கோப்பெங்:
இன்று வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) KM292.7 இல் விரைவுப் பேருந்து கவிழ்ந்து, விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி ஆகியோர் காயமடைந்தனர்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் மாநில செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சம்பவம் குறித்து தங்களுக்கு அதிகாலை 5.41 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், கோப்பெங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பெண் பயணி காயமடைந்த நிலையில் காணப்பட்டதாக அவர் கூறினார்.
“சம்பவத்தின் போது, பேருந்தில் மூன்று நபர்கள் (ஓட்டுநர் உட்பட) இருந்தனர், இருப்பினும், மற்றொரு பயணிக்கு எந்தக் காயமும் எற்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் பஸ்சிலிருந்து வெளியேற்றப்பட்டு, ஆரம்ப சிகிச்சை அளித்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக சுகாதாரப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.