சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் Kesas மோட்டார் சைக்கிள் பாதை தற்காலிகமாக மூடப்படும்

ஷா ஆலம்: ஷா ஆலம் எக்ஸ்பிரஸ்வேயில் (Kesas) கிழக்கு நோக்கிச் செல்லும் மோட்டார் சைக்கிள் பாதை, மேம்படுத்தும் பணிகளுக்காக இந்த சனிக்கிழமை (ஜனவரி 7) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) தற்காலிகமாக பொதுமக்களுக்கு மூடப்படும்.

Kesas Sdn Bhd மக்கள் தொடர்புத் துறை வியாழக்கிழமை (டிசம்பர் 5) ஒரு அறிக்கையில், எக்ஸ்பிரஸ்வேயில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களின் பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்துவதற்காக சாலை மேற்பரப்பு பழுதுபார்க்கும் பணிகளைச் செயல்படுத்துவதற்கு இந்த மூடல் என்று தெரிவித்துள்ளது.

Kinrara Interchange KM44.50 முதல் KM45 வரையிலான (மோட்டார் சைக்கிள்) பாதை சனிக்கிழமை மூடப்படும். அதே நேரத்தில் Kebun Interchange  KM24.30 முதல் KM24.90 வரையிலான பாதை ஞாயிற்றுக்கிழமை மூடப்படும். கெசாஸ் பயனர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும், அப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள சாலை அடையாளங்களைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏதேனும் சந்தேகங்களுக்கு, அவர்கள் Kesas அவசர தொலைபேசி எண் 03-5633 7188 இல் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.kesas.com.my அல்லது அதன் அதிகாரப்பூர்வ Facebook மற்றும் Twitter கணக்குகளைப் பார்க்கவும் என்று அது கேட்டுக் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here