DBKLஇன் முடிவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய Crackhouse நகைச்சுவை கிளப் உரிமையாளர்கள் வழக்கு தாக்கல்

கோலாலம்பூர்:

சர்ச்சைக்குரிய Crackhouse நகைச்சுவை கிளப்பின் வணிக உரிமத்தை ரத்து செய்து, தொழிலை நடத்த கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) தடை விதித்ததை எதிர்த்து, நகைச்சுவை கிளப்பின் உரிமையாளர்களான முகமட் ரிசல் ஜோஹன் வான் கெய்சல் மற்றும் ஷங்கர் ஆர் சந்திரம் ஆகியோர் இன்று வழக்குத் தொடுத்துள்ளனர்.

கிளப்பின் உரிமத்தை ரத்து செய்யும் முடிவு சட்டத்திற்கு எதிரானது என்றும், கோலாலம்பூரில் செல்லுபடியாகும் உரிமத்துடன் வணிகம் நடத்த மத்திய அரசியலமைப்பின் கீழ் தங்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது என்றும், கறுப்புப் பட்டியலிலிருந்து தங்களது பெயரை நீக்கக் கோரியும் அவர்கள் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி முதல் குறித்த நகைச்சுவை கிளப்பின் உரிமத்தை ரத்து செய்ததுடன், கிளப்பை தற்காலிகமாக மூடுமாறு DBKL உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், DBKL இந்த முடிவு செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் முகமட் ரிசால் மற்றும் ஷங்கர் ஆகியோர் அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்தாண்டு ஜூன் 4ஆம் தேதி குறித்த நகைச்சுவை கிளப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 26 வயதான நுரைமிர அப்துல்லா என்ற பெண் இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார் என்ற குற்றச் சாட்டில், Crackhouse நகைச்சுவை கிளப்பிற்கு எதிராக, கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தால் (DBKL) இந்த தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here