லோரி மற்றும் மோட்டார் சைக்கிளை உட்படுத்திய விபத்தில் இருவர் பலி

கூச்சிங்:

சமரஹானில் உள்ள அசஜயா, கம்போங் தெராசி இபான் என்ற இடத்தில் இன்று லோரியும் மோட்டார் சைக்கிளும் மோதிய சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

லோரி ஓட்டுநர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்த நிலையில், லோரியின் துணை ஓட்டுநர் லேசான காயமடைந்தார் என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின், சரவாக் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

உயிரிழந்த இருவரின் உடல்களும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here