கம்போங் பெமுடா ஜெயா, ஜாலான் சீலோங்-சேனையில் உள்ள ஒரு வீட்டில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீயில் சிக்கிக் கொண்ட 17 பேர் பாதுகாப்பாக உயிர் தப்பியதாக, ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் தங்களுக்கு அதிகாலை 4.55 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே பண்டார் பாரு கூலாய் மற்றும் கூலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் ஆகியவற்றிலிருந்து 17 உறுப்பினர்கள் மற்றும் இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
குறித்த கட்டிடம் ஐந்து குடும்பங்களால் வீடாக பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும், அது சுமார் 80 விழுக்காடு எரிந்தது என்றும், இதன்போது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் துணை தீயணைப்புத் தலைவர் முகமட் ஃபௌசி அவாங் கூறினார்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடம் 1970 களில் இருந்த முன்னாள் அலுவலக கட்டிடம் என்றும் அது நீண்ட காலமாக காலியாக இருந்தது என்றும் “பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த வருமானம் கொண்டவர்கள், அவர்கள் வாழ்வாதாரத்திற்காக இங்கு குடியேறினர் என்றும் கம்போங் பாரு ஸ்ரீ அமான் காவல்துறை தலைவர் துகிமின் அஜீஸ் கூறினார்.
“துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தால் அவர்கள் தங்கள் சொத்து மற்றும் வசிக்கும் இடத்தை இழந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.