கோலாலம்பூர்:
புக்கிட் புரோகா, செமினியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 0.8 ஹெக்டேர் காடு எரிந்து நாசமானது.
நேற்றிரவு 7.39 மணியளவில் சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பைப் பெற்ற பின்னர், செமினி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்றும், தீயணைப்பு வீரர்கள் தீ பரவாமல் தடுக்க தம்மால் முடிந்தளவு போராடினர் என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணையோ இயக்குநர் (செயல்பாடுகள்) அஹ்மட் முக்லிஸ் மொக்தார் கூறினார்.
“தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். இருப்பினும் இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை,” என்று அவர் கூறினார்.
























