சட்டவிரோதமாக எரிபொருளை மாற்றியதற்காக இரண்டு கப்பல்கள் தடுத்து வைப்பு -ஜோகூர் மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவு

கோத்தா திங்கியில் தஞ்சோங் செடிலி பெசாருக்கு கிழக்கே RM24.5 மில்லியன் மதிப்புள்ள 7,000 டன் கப்பல் எரிபொருளை சட்டவிரோதமாக மாற்றிய இரண்டு கப்பல்களை ஜோகூர் மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர்.

பினாங்கு மற்றும் பனாமாவில் பதிவுசெய்யப்பட்ட கப்பல்கள், தஞ்சோங் செடிலி பெசாருக்கு கிழக்கே 32 கடல் மைல் தொலைவில், நேற்றுக் காலை 10.50 மணி முதல் 11.30 மணி வரை மலேசிய கடல்சார் அமலாக்கப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டதாக, அதன் இயக்குனர் நூருல் ஹிசாம் ஜகாரியா தெரிவித்தார்.

“பினாங்கில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் ஒரு உள்ளூர்காரர்கள், எட்டு இந்தோனேசியர்கள் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த ஒருவர் அடங்கலாக 10 பேர் கொண்ட பணியாளர்கள் இருந்தனர், பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் 12 இந்தியர்கள் மற்றும் 6 பாகிஸ்தானியர்கள் அடங்கிய 18 பேர் கொண்ட பணியாளர்கள் இருந்தனர்.

“25 மற்றும் 59 வயதுடைய கப்பல் பணியாளர்களும் சரியான அடையாள ஆவணங்களை வைத்திருந்தனர் என்றும், மலேசிய அரசாங்கத்திடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டிய தேவையைத் தவிர்ப்பதற்காக அவர்கள் MFO ஐ மாற்றியதாக நம்பப்படுகிறது.

“மாற்றப்பட்ட எரிபொருள் சட்டப்பூர்வ அல்லது சட்டவிரோதமாக வந்ததா என்பது உட்பட அனைத்து அம்சங்களையும் நாங்கள் விசாரிப்போம்” என்று, அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், அனுமதியின்றி நங்கூரமிட்ட குற்றத்திற்காக மேலும் இரண்டு கப்பல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நூருல் ஹிசாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here