கோலாலம்பூர்: ஜாலான் அம்பாங்கில் இன்று கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் 56ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த சாரக்கட்டினால் கார் பலத்த சேதமடைந்தது.
காலை 8.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், கட்டுமானத்தில் இருந்த 80 அடுக்கு மாடிக் கட்டிடத்தின் சாரக்கட்டுத் துண்டு விழுந்து. அது ஒரு கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த டொயோட்டா கார் மீது மோதியதாக டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் ஏசிபி நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.
இருப்பினும், அந்த நேரத்தில் கார் ஓட்டுநர் கடைக்குள் இருந்ததால் இந்த சம்பவத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.