அம்னோ தேர்தலில் உதவித் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி இன்று தெரிவித்தார். முதல் இரண்டு இடங்களுக்கான போட்டிகளைத் தடைசெய்வதற்கான பிரதிநிதிகளின் முடிவு இன்று இறுதியானது என்று ஜாஹிட் கூறினார்.
கட்சியின் அரசியலமைப்புக்கு அமைவாகவே இந்த பிரேரணை பொதுச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றார். இருப்பினும், உதவித் தலைவர்கள் மற்றும் அதற்குக் கீழே உள்ள பதவிகள் வழக்கம் போல் திறந்திருக்கும் (போட்டியிடப்படும்) என்று அவர் இங்கு அம்னோ பொதுச் சபைக்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். மே 19ஆம் தேதிக்குள் கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.