சபாவை நிர்வகிப்பதற்கு எனக்கு வாய்ப்பளியுங்கள் என்கிறார் ஹாஜிஜி

சபா மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் மக்களின் நல்வாழ்வுக்கான செயற்பாடுகளை நிறைவேற்றும் பொருட்டு, மாநில அரசாங்கத்தை தொடர்ந்து வழிநடத்த அனைத்து தரப்பினரும் இடம் அளிக்க வேண்டும் என்று சபா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹாஜிஜி நூர் இன்று வலியுறுத்தினார்.

“சபா மாநிலத்தை சிறந்த முறையில் தொடர்ந்து நிர்வகிப்பதற்கு எனக்கு வாய்ப்பளியுங்கள், நான் மக்கள் நலன் தொடர்பில் எப்போதும் அக்கறைகொண்டவன், நிச்சயமாக அவற்றை திறம்பட செய்ய அனைத்து தரப்பினரும் இடமளிக்க வேண்டும்” என்று, இன்று சபா பல்கலைக்கழக கல்லூரி (College Sabah Foundation) அறக்கட்டளையின் 2 வது பட்டமளிப்பு விழாவைத் தொடக்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.

சபா மாநிலத்தில் நடந்த சில அரசியல் நெருக்கடிகள் காரணமாக, கடந்த புதன்கிழமை சபா மாநில அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தான் தெரிவித்ததாகவும், இவை அனைத்தும் சபாவின் நலனுக்காக செய்யப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here