சுகாதாரத்துறை அதிகாரிகள் போல் நடித்து, கடை உரிமையாளர்களிடம் பணம் வசூலித்த மூவர் கைது

கடந்த வியாழக்கிழமை சிலாங்கூர், பூச்சோங்கின் பண்டார் புத்திரியில் நடந்த சோதனையின் போது, சுகாதாரத்துறை அதிகாரிகள் என தம்மைக் காட்டிக்கொண்டு, ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டுவந்ததாக நம்பப்படும் மூவரை போலீசார் கைது செய்ததாக, செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அன்பழகன் தெரிவித்தார்.

இரண்டு வார கண்காணிப்புக்குப் பிறகு, 38 முதல் 48 வயதுடைய மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் அழகு நிலையங்களின் உரிமையாளர்களை அச்சுறுத்துவதற்காக சுகாதார அமைச்சக (KKM) அதிகாரிகளைப் போல் நடித்ததாகவும்  அவர் கூறினார்.

சந்தேக நபர்களிடமிருந்து சுகாதாரத்துறையின் லோகோக்கள் கொண்ட சீருடைகள் உட்பட பல சான்றுப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் என்று அன்பழகன் கூறினார்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், குறித்த சந்தேக நபர்கள் உரிமம் இல்லாத அழகு நிலையங்களையும், சுகாதாரத்துறையின் அனுமதி பெறாத உபகரணங்களைப் பயன்படுத்தியவர்களையும் குறிவைத்து, அவர்களை மிரட்டியது தெரியவந்தது.

“குறித்த கடைக்காரர்கள் உரிமத்தை காட்டத் தவறினால் RM200,000 அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைக்கு அனுப்பப்படும் என்று அவர்கள் உரிமையாளர்களை அச்சுறுத்துவார்கள், KKM நடவடிக்கைக்கு அஞ்சும் உரிமையாளர்கள் தாம் தண்டிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக RM10,000 வரை அவர்களுக்கு பணம் செலுத்துவார்கள் ” என்று அவர் இன்று செர்டாங் போலீஸ் தலைமையகத்தில் நடந்த ஒரு சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தக் கும்பல் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து செயல்படுவதாக நம்பப்படுகிறது, மேலும் செர்டாங், பெட்டாலிங் ஜெயா, செலாயாங், ஷா ஆலாம், புக்கிட் ஜாலீல், செந்தூல் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் 20க்கும் மேற்பட்ட வளாகங்களில் இவர்கள் கைவரிசை காட்டியதுடன், அவ்வுரிமையார்களுக்கு RM42,000 இழப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அழகு நிலைய உரிமையாளர்களிடமிருந்து போலீசார் 6 புகார்களை பெர்றதைத் தொடர்ந்து, இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here