வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலில் மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் மரணம்

இன்று காலை பாகன் டத்தோவில் உள்ள ஜாலான் பாகன் இக்கானில் ஏற்பட்ட தீ விபத்தில், 80 வயது ஒரு மாற்றுத்திறனாளி (PwD) முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காலை 6.45 மணியளவில், பாதிக்கப்பட்ட ஓங் சோக் செங் என்பவரின் பிள்ளைகள் மாறும் பேரப்பிள்ளைகள் அனைவரும் காலை உணவுக்காக வெளியே சென்றவேளையில் வீட்டில் திடீரென தீ ஏற்பட்டதாகவும், இதனால் அந்த முதியவரால் அவரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது போனதாக ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்மட் அட்னான் பஸ்ரி கூறினார்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் அங்கு வந்த Hutan Melintang மற்றும் Teluk Intan தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணிநேரம் போராடி தீயை அணைத்தனர் என்றும் இந்த தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து நாசமானது என்றும்,” அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது, மேலும் இவ்வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here