கொள்முதல் கசிவுகளை தடுத்தால் RM10 பில்லியன் சேமிக்க முடியும்

புத்ராஜெயா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ( அரசாங்க்ந் கொள்முதல் முறையில் ஏற்பட்ட கசிவுகளிலிருந்து 10 பில்லியன் ரிங்கிட் வரை சேமிக்க முடியும் என்றார்.

அரசியல் தலையீடு அல்லது அரசு கொள்முதலில் பெரும் தொழிலதிபர்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் பழைய முறையை மாற்றுவது உட்பட அனைத்து நிலைகளிலும் ஊழலை ஒழித்தால் கசிவுகளை தடுக்க முடியும் என்று நிதியமைச்சர் அன்வார் கூறினார்.

நாங்கள் அதிக கசிவுகளை அனுபவித்து வருகிறோம். நிதி அமைச்சகத்தில் இரண்டு மாதங்களுக்குள், 3 பில்லியன் ரிங்கிட் முதல் 4 பில்லியன் ரிங்கிட் வரை சேமிக்க முடியும் என நான் அடையாளம் கண்டுள்ளேன் என்று 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையாடல் கவுன்சில் கருப்பொருளான ‘Membangun Malaysia Madani’யில் அவர் கூறினார்.

துணை நிதியமைச்சர்கள் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் மற்றும் ஸ்டீவன் சிம் சீ கியோங், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஸூகி அலி மற்றும் கருவூலத்தின் (கொள்கை) துணைப் பொதுச்செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here