தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது

ஈப்போ: தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி மனைவியை கட்டி வைத்து,  மெழுகுவர்த்தியால் சூடு வைத்ததாக  42 வயது நபரை போலீசார் கைது செய்தனர். கெரிக் காவல்துறைத் தலைவர்   Zulkifli Mahmood, 35 வயதான பாதிக்கப்பட்ட பெண் ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலை 1.32 மணிக்கு கம்போங் லாலாங் காவல் நிலையத்தில் கெரிக் கம்போங் அலாயில் உள்ள அவர்களது வீட்டில் தனது கணவரால் தாக்கப்பட்டதாக அவர்க புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்டவர் ஏப்ரல் 13 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தான் அவரை ஏமாற்றியதாக குற்றம் சாட்டினார். மேலும் அதை  ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வளையல் மற்றும் சங்கிலி உடையும் அளவிற்கு  அவரை  அடித்து ஆடைகளை கிழித்து, மெழுகுவர்த்தியில் சூடு வைத்ததோடு எரித்து விடுவதாக மிரட்டினார்.

பாதிக்கப்பட்டவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு பின்னர் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்று கணவரிடம் கூறியிருக்கிறார். கணவர் கையை அவிழ்த்து விட்டதும்  கழிவறைக்குச் செல்லும் வழியில், கார் சாவியைப் பிடுங்கிக்கொண்டு தப்பி வந்ததாக தெரிவிதார் என்று திங்கள்கிழமை (ஏப்ரல் 15) ஒரு அறிக்கையில் சுல்கிஃப்ளி கூறினார்.

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க ஒரு குழு அனுப்பப்பட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) இரவு 8.30 மணியளவில் வீட்டில் இருந்த நபரைப் பிடித்ததாகவும் அவர் கூறினார். சந்தேகநபர் பயன்படுத்திய கத்தி உட்பட பல பொருட்களை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக ஜெரிக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். கிரிமினல் மிரட்டலுக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 மற்றும் அதே சட்டத்தின் கீழ் தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக பிரிவு 323 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here