தனது நிர்வாகத்தின் கீழ் புதிய உயரமான கட்டடங்களைக் கட்டும் எண்ணம் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தற்போதுள்ள பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள் (KLCC), மற்றும் TRX கோபுரம் போன்ற இந்த அடையாளங்களே மலேசியாவிற்கு போதுமானது என்று நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார் கூறினார்.
இவ்வாறான கட்டடங்கள் நிறுவுவதற்கான நிதி ஒதுக்கீட்டினை சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரை முன்னேற்றுவதற்கு பயன்படுத்தலாம் என்றார்.
உதாரணமாக கடந்த வெள்ளிக்கிழமை உணவகங்களில் மேற்கொண்ட தனது கண்காணிப்புக்களின் அடிப்படையில், உணவங்களின் சுகாதரம் மற்றும் சுற்றுச் சூழலை முன்னேற்றுவதில் முயற்சிக்கலாம், மேலும் சமுதாயத்தில் பின்தங்கிய குழுக்கள் பயனடைவதை உறுதிசெய்ய நாம் இந்தத் துறைக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.