பள்ளி மாணவர்களுக்கான உதவித் தொகை RM109,000 திருட்டு: பணத்தை திரும்பப் பெறுவதில் SOP மீறப்பட்டுள்ளது என்கிறார் ஃபட்லினா

சிலாங்கூர் Beranang, நேற்று முன்தினம் நடந்த ஒரு சம்பவத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ( RM109,000) குறித்த ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் வங்கியிலிருந்து மீட்ட பின்னர், அந்தப்பணம் அவரது காரிலிருந்து திருடப்பட்டது தொடர்பில் , பள்ளிக்கல்வி நிதி உதவியை திரும்பப் பெறுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) மீறப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தற்போது காவல்துறை மற்றும் சிலாங்கூர் மாநில கல்வித் துறை (JPN) ஆகியவற்றின் கீழ் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

“நாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாகப் பார்க்கிறோம், ஏனெனில் இது ஒரு பெரிய தொகை இழப்பை உள்ளடக்கியது, இரண்டாவதாக, இந்த சந்தர்ப்பத்தில் நிதி தொடர்பாக நடைமுறையில் பின்பற்றப்படும் SOP மீறப்பட்டுள்ளது” என்றார்.

“RM10,000க்கு மேல் உள்ள எந்தத் தொகையை வங்கியிலிருந்து மீட்க்கும்போது, பொறுப்பதிகாரியுடன் மற்றுமொருவர் துணை இருக்க வேண்டும், ஆனால் இது மிகப் பெரிய தொகையாகும். இதில் அந்த தலைமை ஆசிரியர் மட்டுமே பணத்தை கையாண்டிருப்பது கவனிக்கவேண்டிய ஒன்று, எனினும் காவல்துறை மற்றும் சிலாங்கூர் ஜேகல்வித்துறை ஆகியவற்றின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம், அதன் பிறகு மேலும் அறிவிப்பை வெளியிடுவோம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தில், Beranang இல் உள்ள ஒரு பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான உதவித் தொகை RM109,000 பள்ளித் தலைமை ஆசிரியரின் காரில் இருந்து திருடப்பட்டது தொடர்பில் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் இந்த விஷயத்தில் அமைச்சகம் எந்தத்தரப்புடனும் சமரசம் செய்து கொள்ளாது என்றும், இதுவரை, நாட்டில் இதுபோன்ற ஒரு சம்பவம் மட்டுமே பதிவாகியிருப்பதாகவும் ஃபட்லினா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here