சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து செயல்படும் வகையில், மாநிலத்தில் உள்ள ஆறு பேருந்து நிலையங்களிலுள்ள 28 விரைவுப் பேருந்துகள் மலாக்கா சாலைப் போக்குவரத்துத் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
Op Tahun Baharu Cina (TBC) 2023 என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில், சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கான பாதுகாப்புத் தரங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நடத்தப்படுவதாக மலாக்கா ஜேபிஜே இயக்குநர், முஹம்மது ஃபிர்தௌஸ் ஷெரீப் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் மூலம், டயர்கள், சிக்னல்கள், பிரேக் சிஸ்டம், லைட் ரிப்ளக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் ஓட்டுநர் அனுமதி மற்றும் சாலை வரி போன்ற ஆவணங்களும் ஆய்வு செய்யப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
முஹமட் ஃபிர்தௌஸ் கூறுகையில், Op TBC 2023 நடவடிக்கை காலம் முழுவதும், மாநிலத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து விரைவு பேருந்துகளிலும் சோதனைகளை மேற்கொள்வதற்காக JPJ பணியாளர்கள் மலாக்காவில் உள்ள பேருந்து நிலையங்களில் நிறுத்தப்படுவார்கள் என்றார்.
இந்த நடவடிக்கையில் இதுவரை எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
குறித்த சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் தேதிவரை நடைமுறைப்படுத்தப்படும் என்று, நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி லோக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.









