டெலிகிராமில் ஆபாசப் படங்களை அனுப்பிய குற்றச்சாட்டில் ஆடவர் ஒருவருக்கு RM10,000 அபராதம்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, டெலிகிராம் செயலி மூலம் ஆபாசமான படங்களை அனுப்பிய குற்றத்திற்காக, ஆடவர் ஒருவருக்கு குவாலா கங்சார் அமர்வு நீதிமன்றம் இன்று RM10,000 அபராதம் விதித்தது.

குற்றம் சாட்டப்பட்ட முகமட் அசிரஃப் அஹ்மட் சுஹைமி, 28, என்பவர் அபராதத்தை செலுத்தத் தவறினால், ஆறு மாத சிறைத்தண்டனையையும் எதிர்கொள்கிறார்.

நீதிபதி ரொஹைதா இஷாக் முன்னிலையில் மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை, குற்றம் சாட்டப்பட்ட முகமட் அசிரஃப் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டின்படி, ஜனவரி 8, 2020 அன்று அதிகாலை 1.57 மணிக்கு ‘அகாப்’ என்ற கணக்குப் பெயருடன் டெலிகிராம் செயலி மூலம் ஒரு பிள்ளையின் தந்தையான அவர், பழிவாங்கும் நோக்கத்துடன் மற்றோரு பெண்ணிற்கு அனுப்பியதாகவும், குறித்த படத்தை 9 ஜனவரி 2020 அன்று காலை 10 மணிக்கு அந்தப்பெண் பார்த்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவர் போலீஸ் புகாரளித்ததாகவும் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here