இன்று காலை 8.40 மணிக்கு, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை தெற்கு நோக்கிய 259 ஆவது கிலோமீட்டரில், Rasah அருகே உள்ள போர்ட்டிக்சன் டோல் பிளாசாவின் வெளியேறும் பகுதிக்கு அருகில், கன்டெய்னர் லோரி தீப்பிடித்ததில் லோரியின் இயந்திர பகுதியில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் காலை 8.42 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, சிரம்பான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் அதிகாரிகள் குழு அந்த இடத்திற்கு விரைந்தாக, சிரம்பான் தீயணைப்பு நிலையத்தின் தலைவர் 2, முகமட் கமால் முகமட் திமார் கூறினார்.
குறித்த இடத்திற்கு தீயணைப்பு குழு வந்தபோது பிளாஸ்டிக் குப்பைகளை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லோரியில் தீப்பிடித்ததைக் கண்டதாகவும் கன்டெய்னர் லோரியின் இயந்திரப்பகுதி தீப்பிடித்து 100 சதவீதம் எரிந்து நாசமானது என்றும் திமார் கூறினார்.
இதில் லோரியின் ஓட்டுநர் மற்றும் முன்இருக்கை பயணி ஆகிய இருவரும் பரிதாமாக உயிரிழந்துள்ள நிலையில், இருவரது பாலினம் மற்றும் அடையாளம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நந்தா மரோஃப் கூறுகையில், கன்டெய்னர் லோரி கிள்ளானில் இருந்து செனாவாங்கிற்குச் சென்று கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டது என்று ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
குறித்தா கன்டெய்னர் லோரி சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, இடதுபுறப் பாதையில் சென்ற அந்த லோரி கட்டுப்பாட்டை இழந்து, வலது பாதையின் சாலைத் தடுப்பில் மோதி, விபத்துக்குளாகி தீப்பிடித்து எரிந்ததாக நம்பப்படுகிறது.
“விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிரம்பான் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையின் (HTJ) தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.