பாசீர் மாஸில் போதைப்பொருள் வியாபாரிகள் என நம்பப்படும் மூவர் கைது; துப்பாக்கி மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல்

கோத்தா பாரு மாவட்டம் மற்றும் பாசீர் மாஸில் தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், மூன்று போதைப்பொருள் வியாபாரிகளை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 5,200 குதிரை மாத்திரைகளையும் பறிமுதல் செய்ததாக, கிளாந்தான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் கூறினார்.

கோத்தா பாரு மற்றும் பாசீர் மாஸ் மற்றும் கிளாந்தான் ஆகிய இடங்களில் தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனையில், 27, 29 மற்றும் 36 வயதுடைய சந்தேகநபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அவர்களிடமிருந்து மொத்தம் 5,200 குதிரை மாத்திரைகளும் Retay 84 FS பிஸ்டல் மற்றும் 34 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் சந்தேகநபர்கள் மூவரும் நேற்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக முஹமட் ஜாக்கி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here