பெர்சத்து 2022 ஆண்டுகூட்டம் மார்ச் மாதம் நடைபெறும்

கோலாலம்பூர்: 2022 ஆம் ஆண்டுக்கான பெர்சத்து ஆண்டு பொதுக்கூட்டம் இந்த ஆண்டு மார்ச் 3-5 தேதிகளில் நடைபெறும்.

வியாழக்கிழமை (ஜனவரி 19) இரவு நடைபெற்ற கட்சியின் உச்ச கவுன்சில் கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டதாக பெர்சத்து பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கிளைகளுக்கான 2023 ஆண்டுக் கூட்டங்கள் ஜூலை 1 முதல் ஆகஸ்டு 30 வரையிலும், கிளை (அக்டோபர் 7) தொகுதி கூட்டங்கள் (அக் 21) நவ.23-25 ​​வரை பொதுச் சபையும் நடைபெறும் என்றார்.

இதுபோன்று, கிளை மற்றும் கோட்டக் குழுக்களுக்கான தேர்தல்கள் மற்றும் புதிய பதவிக்காலத்திற்கான உச்ச மன்ற தேர்தல்கள் கட்சியின் அரசியலமைப்பின்படி மேலே குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்று அவர் வெள்ளிக்கிழமை (ஜன. 20) கூறினார்.

15ஆவது பொதுத் தேர்தலின்  அறிக்கை மற்றும் வரவிருக்கும் மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்தும் கட்சியின் உச்ச மன்றத்தில் விவாதித்ததாக ஹம்சா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here