உணவகங்களில் விலை உயர்வா? – பிரெஸ்மா கண்டனம்

உணவகங்களின் விலை உயர்வு எனும் குற்றச்சாட்டுகளுக்கு பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. நாட்டில் உள்ள உணவகங்களில் உணவுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

அதே வேளையில் விலைகள் அதிகம் இருக்கும் கடைகளை மக்கள் தான் புறக்கணிக்க வேண்டும். விலைகளை பரிசீலனை செய்து கடைகளை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் ரபிசி ரம்பி ஆலோசனை கொடுத்துள்ளார்.
உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் நலத்துறை அமைச்சும் இதனை தான் வழியுறுத்தி வருகிறது.

விலைகளை கருத்தில் கொண்டு கடைகளை தேர்வு செய்வது பயனீட்டாளர்களின் உரிமையாகும். இதற்கு யாருமே தவறு சொல்ல முடியாது. ஆனால் அனைத்து உணவகங்களிலும் விலை உயர்வு என்று குற்றம் சாட்டுவது தான் ஏற்புடையதாக அல்ல என்று பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி கூறினார்.

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறை, மூலப் பொருட்களின் கட்டுங்கடங்காத விலை உயர்வு ஆகிய பிரச்சினைகளுக்கு மத்தில் அனைத்து உரிமையாளர்களும் உணவகங்களை நடத்தி வருகின்றனர். பொருட்களின் விலை அதிகம் இருந்தாலும் பல உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நியாயமான விலையில் உணவுகளை வழங்கி வருகின்றனர்.

உணவகங்களின் நிர்வாகத்தை குற்றம் சாட்டுவதை நிறுத்தி விட்டு, மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும். இதன் மூலம் உணவுகளின் விலையும் உயராது. மேலும் ஒரு சில உணவகங்களில் விலை உயர்வு என்பதால் அனைத்து உணவகங்களையும் சாடுவது சரியில்லை.

இது உணவக உரிமையாளர்களுக்கு தான் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார். இதனிடையே ஓபிஆர் எனப்படும் வங்கி வட்டி விகிதம் 2.75% நிலை நிறுத்தப்படும் என்று பேங்க் நெகாரா அறிவித்து உள்ளது.  இது எங்களை போன்ற வணிகர்களுக்கு பெரும் மன நிம்மதியை வழங்கி உள்ளது. அதே வேளையில் இந்த வட்டி விகிதத்தை மேலும் குறைத்தால் மக்களுக்கு பயன் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here