செங்கல்லால் காரை தட்டியதோடு தகாத வார்த்தைகளால் வாகனமோட்டியை திட்டிய நபர் தேடப்படுகிறார்

கோலாலம்பூர்: ஜாலான் மெட்ரோ 1, மெட்ரோ ப்ரிமா, கெப்போங்கின் போக்குவரத்து விளக்கு சந்திப்பில், சாலை சீற்றத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படும் ஒருவரை கோலாலம்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

கோலாலம்பூர் காவல் படைத் தலைமையகம், இன்று இரவு (ஜனவரி 22) தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கையில், சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன்வருமாறு கேட்டுக்கொண்டது.

அவர்கள் கெப்போங் காவல் நிலையத்தை 03-6274 2312 என்ற எண்ணிலும், செந்துல் மாவட்ட காவல்துறை தலைமையக செயல்பாட்டு அறையை 03-4048 2222 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஒரு நபர் காரின் கண்ணாடியை செங்கல்லைப் பயன்படுத்தி வாகனத்தை தட்டியதோடு வாகனமோட்டியை மோசமான வார்த்தைகளால் திட்டும் வீடியோ வைரலாக பரவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here