மாச்சாங்கில் மேற்கொள்ளப்பட்ட “ஓப்ஸ் செலாமாட்” நடவடிக்கையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதாக நம்பப்படும் பதினாறு பேர் கைது

கடந்த ஜனவரி 19 முதல் மாச்சாங் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மூன்று நாள் ஓப்ஸ் செலாமாட் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 18 முதல் 45 வயதுடைய 16 பேர் கைது செய்யப்பட்டதாக மாச்சாங் காவல்துறைத் தலைவர், முகமட் அட்லி மாட் டாட் கூறினார்.

சாலைப் போக்குவரத்துத் துறை, குடிமைத் தற்காப்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் மக்கள் தன்னார்வப் படை (ரேலா) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் இந்த நடவடிக்கையின் போது, போக்குவரத்து சமிக்ஞைகளை மீறுதல், இரட்டைக் கோடுகளைக் கடத்தல் மற்றும் வாகனம் ஓட்டும்போது கைபேசியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைச் செய்ததற்காக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறை 177 அபராதங்கள் விதிக்கப்பட்ட்தாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here