ஜோகூரின் லாப்பீஸில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 413 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சம்

லாப்பீஸில் உள்ள Kampung Tenang ஐ சேர்ந்த மொத்தம் 413 பேர் தங்கள் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளதாக ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பதில் இயக்குநர், முகமட் ரிசல் புவாங் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 119 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) காலை 8 மணிக்கு SK Kampung Tenang இல் உள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும், இதில் 16 மாற்றுத்திறனாளிகள், 39 முதியவர்கள் மற்றும் 8 குழந்தைகள் உட்பட மொத்தமாக 413 பேர் உள்ளனர்,” என்றும் அவர் கூறினார்.

அதிகாலையில் இருந்து பெய்த தொடர் மழை காரணமாக, கம்போங் பயா மேரா லாமாவில் உள்ள பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

“கம்போங் பெக்கான் ஆயிர் பனாஸில் 70 வயதான ஒருவர் மீட்கப்பட்டு டேவான் பெக்கான் ஆயிர் பனாஸ் நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டார்,” என்று அவர் மேலும் கூறினார்.

மாநிலத்தில் 432 இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை திணைக்களம் கண்டறிந்துள்ளதாகவும், அப்பகுதியின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் முகமட் ரிசல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here