KLIA அனைத்துலக விமான நிலையத்தில் அதிகமான குடிநுழைவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் – சுற்றுலா அமைச்சகம் விருப்பம்

மலேசியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து KLIA அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவு நடைமுறைகளை மேம்படுத்த, குடிநுழைவு கவுண்டர் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங், பயணிகளின் நீண்ட காத்திருப்பு நேரத்தினை சமாளிக்க இந்த குடிநுழைவு கவுண்டர் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பு மிக முக்கியம் என்றும் இது அனுமதி செயல்முறையை எளிதாக்கும்.
என்றும் கூறினார்.

“மலேசியா சுற்றுலாப் பயணிகளை வரவேற்கவும், அவர்களுக்கு நாட்டை மிகவும் விருப்பமான இடமாக மாற்றவும் விரும்பினால், இந்தப் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும்” என்று அவர் நேற்று திங்கள்கிழமை (ஜனவரி 23) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அறிக்கையின்படி, KLIA இல் சுற்றுலாப் பயணிகளின் வருகை செயல்முறையைப் பார்த்தபோது, சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது, சிலர் குடிநுழைவு செக்-இன் செயல்முறைக்காக கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் வரை காத்திருக்கிறார்கள்.

மேலும் KLIA அதிகாரிகள் ஆய்வு நடைமுறைகளை மேற்கொள்ளும்போது, சுற்றுலாப் பயணிகளை எளிதாக்குவதற்காக பன்மொழி புலமை கொண்ட பணியாளர்களை நியமிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தியோங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here