பகாங், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் நாளை வரை கனமழை தொடரும் என எதிர்பார்ப்பு – மலேசிய வானிலை ஆய்வு மையம்

கடந்த வாரம் முதல் நாடு முழுவதும் பெய்து வரும் மழை வானிலை நாளை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக பகாங், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய நான்கு மாநிலங்களில் நாளை வரை தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜோகூர் (குளுவாங், மெர்சிங், கூலை, கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு, டாங்காக் மற்றும் மூவார்), மற்றும் சபாவில் சண்டகான், டெலுபிட், கினாபதங்கான், பெலூரான் மற்றும் கூடாட் போன்ற பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பகாங் (குவாந்தான், பெக்கான் மற்றும் ரோம்பின்), சரவாக் (ஸ்ரீ அமான், சாரிகேய், பாகன், ஜுலாவ், சிபு, பிந்துலு, டாடாவ், செபாவ், மிரி மற்றும் சபா (சண்டகான் மற்றும் டோங்கோட்) ஆகிய இடங்களிலும் நாளை வரை மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

மேலும் கிழக்கு ஜோகூர், பகாங், திரெங்கானு மற்றும் கிளாந்தான் ஆகிய மாநிலங்களின் கடற்கரை பகுதிகளில் 3.5 மீட்டர் உயர அலைகளுடன் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here