ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் தலா RM300 நிதி உதவியை பெறும்- மந்திரி பெசார்

ஜோகூர் மாநிலத்தில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் மாநில அரசிடமிருந்து RM300 உதவியைப் பெறுவார்கள் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் கானி தெரிவித்தார்.

“இந்த உதவி அவர்களின் வாழ்க்கை செலவை குறைக்க சிறிது உதவும் எனவும், வீடுகள் கழுவுவது, சுத்தம் செய்வது போன்ற உதவி தேவைப்பட்டால் அதற்கு தன்னார்வலர்கள் உதவுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

“தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA) பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM1,000 வழங்கும், அத்தோடு மாநில அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கும் தலா RM300 என மொத்தம் RM1,300 ஐ ஒவ்வொரு குடும்பமும் பெறும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கம்போங் பாயா மேரா பல்நோக்கு மண்டபத்தில் இயங்கிவரும் தற்காலிக நிவாரண மையத்திற்குச் சென்ற பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜோகூரில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அவர், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, ஐந்து நிவாரண மையங்கள் ஏற்கனவே மூடப்பட்டிருப்பதாகவும், இன்னும் 53 நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,111 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here