தேசிய கடற்படையின் புதிய தலைவராக டத்தோ அப்துல் ரஹ்மான் அயோப் நியமனம்

தேசிய கடற்படையின் (RMN) புதிய தலைவராக அட்மிரல் டத்தோ அப்துல் ரஹ்மான் அயோப் வெள்ளிக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டாய ஓய்வு பெறும் நடப்புத் தலைவர் அட்மிரல் டான்ஸ்ரீ முகமட் ரேசா முகமட் சானிக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டார்.

கடற்படைத் தளபதிக்கான கடமைகளை ஒப்படைக்கும் நிகழ்வு கடந்த வெள்ளியன்று விஸ்மா பெர்தஹானனில் இடம்பெற்றது, இந்நிகழ்வில் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல்டான் ஸ்ரீ அபாண்டி புவாங், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் டத்தோஸ்ரீ முயெஸ் அப்துல் அஜீஸ் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

டத்தோ அப்துல் ரஹ்மான் அயோப் 38 ஆண்டுகளாக கடற்படையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here