ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று திங்கட்கிழமை (ஜனவரி 30) அதிகாலை 4 மணிக்கு 731 குடும்பங்களைச் சேர்ந்த 2,593 பேரில் இருந்து, காலை 8 மணி நிலவரப்படி 774 குடும்பங்களைச் சேர்ந்த 2,757 பேராக உயர்ந்துள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குள்ள ஆறு மாவட்டங்களில் இயங்கிவரும் மொத்தம் 31 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அது இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜோகூரின் பத்து பகாட், குளுவாங், கோத்தா திங்கி, மெர்சிங், சிகாமாட் மற்றும் தாங்காக் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.