தொடர் கனமழை: காவல்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர் என்கிறார் தேசிய காவல்படை தலைவர்

ஜோகூர் மற்றும் சபாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை சமாளிக்க புக்கிட் அமான் உட்பட கூடுதல் காவல்துறையினரை அனுப்ப காவல்படை தயாராக இருக்கும் என்று தேசிய காவல்படை தலைவர், டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களின் திறன் இன்னும் போதுமானதாக இருப்பதால், தற்போதைக்கு கூடுதல் ஆள் தேவை இல்லை என்றார்.

அவ்வாறு தேவை ஏற்பட்டால், முதலில் போலீஸ் படைத் தலைமையகத்தில் இருந்தும், அதைத் தொடர்ந்து புக்கிட் அமானிலிருந்தும் ஆட்களை போலீசார் அனுப்புவார்கள்.

“இதுவரை, ஜொகூர் மற்றும் சபா மட்டுமே இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது ஆனாலும் வெள்ளத்தால் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,” என்று அவர் நேற்று ஸ்ரீ மேடன் காவல் நிலையத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

“பல இடங்களில் நிலைமை மேம்பட்டு வருகிறது, இருப்பினும் தொடர்ச்சியான மழை பெய்தால் வெள்ளத்தை ஏற்பம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here