ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் வசூலில் டாப் 10 பட வரிசையில் 2ஆவது இடத்தில் பதான்

நடிகர் ஷாருக் கான் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது. அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படம் பல தடைகளை எதிர்கொண்டது.

இறுதியில் அந்த போராட்டத்தில் வெற்றி பெற்று, கடந்த 25ஆம் தேதி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆக்சன், திரில்லர், நகைச்சுவை கலந்த அதிரடி திரைப்படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ரூ.250 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

படத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோனேவின் கலக்கல் கெமிஸ்ட்ரி, ஜான் ஆபிரஹாமின் அதிரடி நடிப்பு, சல்மான் கானின் 10 நிமிட சிறப்பு தோற்றம் என ரசிகர்களுக்கு திரை விருந்து அளித்துள்ளது. படத்திற்கு விஷால்-சேகர் இசையூட்டி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here