விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை சரியானது: டில்லி உச்ச நீதிமன்றம்

புது டெல்லி:

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது சரியானதுதான் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் கோரி போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருவதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இதை ஆய்வு செய்ய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாது ஒழிக்கப்பட்டது. இருப்பினும் தனி ஈழம் கோருவதையோ, பிரசாரம் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கைகள் மூலம், ஈழம் அமைவதற்கான பணிகளில் ரகசியமாக ஈடுபடுவதையோ அந்த இயக்கம் கைவிடவில்லை என தீர்ப்பாயத்திடம் ஒன்றிய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அந்த இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய ஆதாரம் இருப்பதாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here