மீன்பிடிக்கச் சென்றபோது ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

ஜித்ரா: ஜாலான் சங்லாங்கில் உள்ள கம்போங் பத்து 7ல் ஆற்றில் விழுந்த நபர் நேற்று, நீரில் மூழ்குவதற்கு முன்,  உதவிக்காக கூக்குரலிட்டுள்ளார். இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ஆசிரியர் கைருல் அசுவார் முகமட் சவுத் (41) என்பவர், தனது நண்பருடன் மீன்பிடிக்க ஆற்றுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.

சம்பவத்தின் போது, ​நண்பர் பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிக்க உதவ முயன்றார், ஆனால் இருண்ட நீர் மற்றும் ஆற்றின் ஆழம் இரண்டு மீட்டருக்கு மேல் இருந்ததால் முயற்சி தோல்வியடைந்தது.

அதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அவரது சடலம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, அவரது நண்பர் பொதுமக்களிடம் உதவி கேட்டார்.

குபாங் பாசு மாவட்ட காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் ரோட்ஸி அபு ஹாசன் கூறுகையில், ஆற்றில் மூழ்கிய சம்பவம் தொடர்பாக நேற்று மாலை 5 மணியளவில் MERS 999 என்ற எண்ணிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.

அவர் அந்த இடத்திற்கு வந்தவுடன், பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே தீயணைப்புத் துறையால்  மீட்கபட்டதை  கண்டார். அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் உடலை பரிசோதனை செய்ததில் குற்றத்திற்கான அறிகுறிகளோ அல்லது கூறுகளோ இல்லை.

உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜித்ரா மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் நீரில் மூழ்கியதால் இறந்ததாக நம்பப்படுகிறது.

உயிரிழந்தவர் பெர்லிஸில் உள்ள கங்காரின் கம்போங் பதங் பெஹோர் பகுதியைச் சேர்ந்தவர், மேலும் உடல் அடுத்த நடவடிக்கைக்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது  என்று அவர் கூறினார். உயிரிழந்தவருக்கு நீச்சல் தெரியாது என்பது புரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here