சீனா மற்றும் இந்தியாவிற்கு புதிய நேரடி விமான வழித்தடங்களை திறக்க ஜோகூர் திட்டம்- கே. ராவன் குமார்

ஜோகூரிலிருந்து நேரடியாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் புதிய அனைத்துலக நேரடி விமான வழித்தடங்களை திறக்க ஜோகூர் விரும்புகிறது, இது அதன் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் என்று மாநில சுற்றுலா, சுற்றுச்சூழல், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரக் குழுவின் தலைவர், கே. ராவன் குமார் தெரிவித்தார்.

ஜோகூரில் சுற்றுலாவை மேம்படுத்த உதவுவதற்காக, சுற்றுலா, கலை மற்று- கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங்குடன் சமீபத்தில் ஒரு சந்திப்பை மேற்கொண்டதாகவும், செனாய் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுக்கு நேரடி விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் தொடர்பிலும் சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

செனாய் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து தற்போது தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வியட்நாமுக்கு நேரடி அனைத்துலக விமானத்தடங்கள் செயற்பட்டு வருகின்றன, இதுபோல இந்தியா மற்றும் சீனாவுடனான நேரடி விமானத் தடங்களை திறந்தால், அது சுற்றுலாத்துறையை இன்னும் வளர்ச்சியடையச் செய்யும் என்றும் MIC இளைஞர் தலைவருமான ராவன் குமார் மேலும் கூறினார்.

“விமான நிலையத்தில் புதிய முனையம் அமைப்பது உள்ளிட்ட மேம்படுத்தும் பணிகள் ஏற்கனவே முடிந்துள்ளன. இது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மாநிலத்திற்கு வரவழைப்பதற்கான எங்கள் முயற்சிகளில் ஒரு பகுதி என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here