தீ விபத்தில் உடல்பேறு குறைந்த 64 வயது முதியவர் பலி

பெந்தோங்கில் உள்ள கம்போங் பெலன்டரில் இன்று இரவு 9 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 வயது ஊனமுற்ற நபர் (OKU) உயிரிழந்தார்.காராக், கம்போங் பாயா பெலன்டரைச் சேர்ந்த முகமட் யூசோப் இட்ரிஸ் 64, என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் அவர் வசித்து வந்த அரை நிரந்தர வீடு 90% சேதமடைந்தது. தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் இரவு 9.02 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்று சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 16 நிமிடங்களுக்குப் பிறகு, இரவு 9.27 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

காராக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் (BBP) மற்றும் பெந்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த மொத்தம் 17 உறுப்பினர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here