இந்த ஆண்டு தைப்பூசத்தைக் கொண்டாட இங்குள்ள கூனுங் செரோவில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலுக்கு 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்து பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட்-19 காரணமாக தற்போது தடைகள் மற்றும் நிபந்தனைகள் எதுவுமில்லை என்பதால், 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இக்கோயிலில் நடைபெறும் உற்சவத்தை கண்டுகளிக்கவும், தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது உள்ளிட்ட மத சடங்குகளை செய்யவும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவார்கள் என்று அதன் தலைவர் எம்.விவேகாந்தா கூறினார்.
“Jalan Sungai Pari, Buntong இல் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து Gunung Chero வில் உள்ள கோவிலுக்கு மொத்தம் 1,000 காவடி எடுப்போர் ரத ஊர்வலத்துடன் வருவார்கள் ” என்று அவர் கூறினார்.
தைப்பூசக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் காவல்துறையினரின் உதவியுடன் நிறைவடைந்துள்ளதாகவும்,அவர்கள் ரத ஊர்வலம் செல்லும் பாதையில் சீரான போக்குவரத்தை உறுதி செய்து கண்காணிப்பை மேற்கொள்வார்கள் என்றும் கூறினார்.
உணவு, பானங்கள் மற்றும் பிரார்த்தனை பொருட்கள் விற்பனைக்காக 200க்கும் மேற்பட்ட கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கோயில் நிர்வாகம் மற்றும் ஈப்போ நகராண்மைக் கழகத்துடன் இணைந்து, வளாகத்தைச் சுற்றி குப்பைத் தொட்டிகளை வைத்துள்ளதுடன், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் மேலு கூறினார்.
மேலும், இந்த கொண்டாட்டத்தின் போது பார்வையாளர்களின் வசதிக்காக பல நடமாடும் கழிப்பறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான சிறப்பு கழிப்பறைகள் ஆகியவையும் நிறுவப்பட்டுள்ளதாக ” அவர் கூறினார்.
இதற்கிடையில், தைப்பூச ஊர்வலத்திற்காக ஈப்போவைச் சுற்றியுள்ள பல சாலைகள் இன்று மாலை 6 மணி முதல் செவ்வாய்கிழமை வரை கட்டம் கட்டமாக மூடப்படும் என்று ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் யஹாயா ஹாசன் தெரிவித்தார்.















