3 மாநிலங்களில் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பிற்கு 6.1 மில்லியன் செலவு என மக்களவையில் தகவல்

பிரதமர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று மாநிலங்களில் ஹரி ராயா திறந்த இல்லங்களுக்கு அரசாங்கம் RM6.1 மில்லியன் செலவிட்டதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது. கெடாவில்  RM3.1 மில்லினும் அதே சமயம் கிளந்தான் மற்றும் தெரெங்கானுவில் தலா RM1.5 மில்லியன் செலவானது என்று சிறப்பு நிகழ்ச்சிகள் அமைச்சர் அர்மிசான் அலி கூறினார்.

இதில் இடம் தயாரித்தல், தளவாடங்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்கான செலவுகள் அனைத்தும் அடங்கும் என்று அவர் அவாங் ஹாஷிமுக்கு (PN-Pendang) எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.

கெடாவில் நடைபெற்ற திறந்த இல்லத்தில் சுமார் 25,000 விருந்தினர்கள் கலந்துகொண்டதாகவும், கிளந்தன் மற்றும் தெரெங்கானுவில் நடந்த நிகழ்வுகள் தலா 15,000 பேர் கலந்து கொண்டதாகவும்  ஆர்மிசான் கூறினார்.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஶ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற கடந்த ஆண்டு ராயா திறந்த இல்லத்திற்குச் செய்யப்பட்ட செலவை விட 6.1 மில்லியன் ரிங்கிட் மிகக் குறைவு என்று அவர் கூறினார்.

2022 திறந்த இல்லத்திற்கு RM11 மில்லியன் செலவானது. அது சுமார் 70,000 பார்வையாளர்களை ஈர்த்தது என்று Armizan கூறினார். இந்த ஆண்டு மூன்று மாநில ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பின்போது சிறு வணிகர்கள், ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்து வழங்குநர்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here