பினாங்கில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் மொத்தம் 62,197 பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளன

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) இப்போது பினாங்கின் தென்மேற்கு மாவட்டத்தில் பரவியுள்ளது, இதன் விளைவாக மேலும் மூன்று பன்றி பண்ணைகள் மூடப்பட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, பினாங்கில் உள்ள 27 பன்றிப் பண்ணைகள் 62,197 பன்றிகள் ASF நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.

“தற்போது, பன்றிக் காய்ச்சாலால் தெற்கு செபெராங் பிறை மாவட்டத்தில் 18 பன்றிப் பண்ணைகளும்; மத்திய செபெராங் பிறையில் 2 பன்றிப் பண்ணைகளும்; வடக்கு செபெராங் பிறை 4 பன்றிப் பண்ணைகளும்; மற்றும் பாராட் தாயாவில் 3 பன்றிப் பண்ணைகளுமாக மொத்தம் 27 பண்ணைகளில் இந்த காய்ச்சல் பரவியுள்ளது” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இதுவரை 11,943 பன்றிகளை அழிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் பரவுவதைத் தடுக்க இன்னும் சடலங்களை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், அதேசமயம் அகற்றப்பட்ட பன்றி சடலங்கள் பொது குடியிருப்புகளில் இருந்து வெகு தொலைவில் புதைக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் புதைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், பினாங்கு மற்ற மாநிலங்களுக்கு பன்றி இறைச்சியை ஏற்றுமதி செய்யும் மாநிலமாக இருப்பதால், அதன் சொந்த நுகர்வுக்கு பன்றி இறைச்சியின் பற்றாக்குறையை எதிர்கொள்ளாது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here