கட்டடத்தின் பால்கனியிலிருந்து காலி போத்தலை வீசிய ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு

கட்டிடத்தின் பால்கனியில் இருந்து பரபரப்பான போக்குவரத்துள்ள சாலையில், காலி போத்தலை ஆடவர் ஒருவர் வீசி எறிந்தது தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இங்குள்ள கம்போங் பாருவில் உள்ள ஜாலான் செண்டானாவில் உள்ள குடியிருப்புப் பிரிவில் இந்த சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்தார்.

டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுள்ளது என்றும், அவரைக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட எவரிடமிருந்தும் இதுவரை எந்த புகாரும் காவல்துறைக்கு வரவில்லை என்று நூர் டெல்ஹான் கூறினார்.

நேற்று, ஒரு நபர் காலி போத்தலை சாலையை நோக்கி வீசுவதைக் காட்டும் 43 வினாடிகள் கொண்ட வீடியோ, @syruppoy எனப்படும் டிக்டாக் கணக்கு வைத்திருப்பவரால் பதிவேற்றப்பட்ட பின்னர் அது நெட்டிசன்களின் கண்டனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here