பெட்டாலிங் ஜெயாவில் ஒருவரை கடத்திச் சென்று கட்டிவைத்து, RM25,000 மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் 3 வெளிநாட்டினர் கைது

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் தமது சக நாட்டைச் சேர்ந்த ஒருவரை தவறாக சிறைபிடித்து, RM25,000 மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் மூன்று வெளிநாட்டினரை போலீசார் கைது செய்துள்ளதாக, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.

வெளிநாட்டவர் ஒருவர் ஒரு குழுவினரால் தவறாகக் கடத்திச் சென்று கட்டிவைக்கப்பட்டதாகவும், அவரை மிரட்டி RM25,000 பணம் பறித்ததாகவும் காவல்துறைக்கு ஒரு புகார் கிடைத்தது.

குறித்த புகாரின் பேரில், அதே நாளில், PJ சென்டர்ஸ்டேஜில் வைத்து மூன்று வெளிநாட்டு ஆண்களை போலீசார் கைது செய்தனர்” என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் அனைவரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் சட்டத்தின் 348 ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here