பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,797 பேர் அங்குள்ள 20 நிவாரண மையங்களில் தஞ்சம்

இன்று காலை 8 மணி நிலவரப்படி, குவாந்தான் மற்றும் பெக்கான் ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 தற்காலிக நிவாரண மையங்களில் 847 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,797 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணாமாக குவாந்தானில் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதாவது 16 நிவாரண மையங்களில் 812 குடும்பங்களில் இருந்து 2,678 பேராகவும், பெக்கனில், 35 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 119 பேர் இன்னும் அங்குள்ள 4 நிவாரண மையங்களில் தங்கியிருப்பதாகவும் மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் (APM) பகாங்கின் இயக்குநர், சே ஆடாம் ஏ. ரஹ்மான் கூறினார்.

இதற்கிடையில் அங்குள்ள இரண்டு ஆறுகள், அதாவது ஸ்ரீ டாமாயில் (குவாந்தன்) சுங்கை பெலாட் 5.11 மீட்டர் அளவைப் பதிவுசெய்தது, அதே நேரத்தில் பாஹாவ் – கெராடோங் பாலத்தில் (ரொம்பின்) சுங்கை கெராடோங் 24.01 மீட்டர் அளவைப் பதிவு செய்தது. இவ்விரண்டும் எச்சரிக்கை அளவை கடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் அங்குள்ள ஆறு ஆறுகள் இன்னும் மேல்நோக்கி எச்சரிக்கை அளவை பதிவு செய்துள்ளதுடன் மற்றைய ஐந்து ஆறுகளின் நீர்மட்டமும் மேல்நோக்கிய போக்கைக் காட்டுகின்றன,” என்று அவர் கூறினார்.

பகாங்கின் 11 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று பிற்பகல் முதல் நாளை இரவு வரை பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here