பண்டார் சன்வேயில் குப்பைகளை ஆற்றில் வீசியது தொடர்பான வீடியோ தொடர்பில் போலீஸ் விசாரிக்கிறது

பண்டார் சன்வேயிலுள்ள ஆற்றில் ஒரு நபர் குப்பை பையை வீசுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களிலும் பெரிதும் பகிரப்பட்டதையடுத்து, போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.

இந்த சம்பவம் பிப்ரவரி 9 ஆம் தேதி பண்டார் சன்வேயிலுள்ள சுங்கை பெனாகா அருகே நடந்தது என்று அறியமுடிகிறது என்றார்.

அதனைத் தொடர்ந்து “19 வயதான கல்லூரி மாணவர் பிப்ரவரி 10 ஆம் தேதி சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறையிடம் ஆஜரானார். எங்கள் விசாரணையின் அடிப்படையில், ஆற்றில் வீசப்பட்ட பொருட்கள் பிரார்த்தனை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட உணவு” என்று கண்டறியப்பட்டதாக, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், வாகனங்களில் இருந்து குப்பைகளை வீசுவது தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here