இன்றிரவு துருக்கியே பயணமாகிறார் பிரதமர்

துருக்கியே- சிரியாவில் நடந்த பயங்கரமான நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கான மக்களைக் காவுகொண்டது யாவரும் அறிந்ததே. இன்னமும் அங்கு மீட்பு பணி நடந்து வருவதுடன், பலியானோர் எண்ணிக்கை சுமார் 31,000-ஐ தாண்டியுள்ளது.

துருக்கியே நாட்டிற்கு ஆதரவது தெரிவிக்கும் பொருட்டு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இரவு துருக்கியே செல்கிறார்.

“மலேசியாவின் சிறப்புப் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு (SMART) ஏற்கனவே அங்கு இருப்பதால், ஒரு கள மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாலும், ஆரம்பத்தில் நான் தயக்கம் காட்டினேன். இருப்பினும், நட்புணர்வின் காரணமாக நான் அங்கு செல்ல முடிவு செய்துள்ளேன், ”என்று அவர் இன்று நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த செனட்டர்களுடனான சந்திப்பின் பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த ஒரு நாள் பயணத்தில் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிரும் உடன் வருவார் என்று அன்வார் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here