விடுதி ஒன்றின் நான்காவது மாடியிலிருந்து குதிக்க முயன்ற பாகிஸ்தானியர் தீயணைப்பு வீரக்களால் காப்பாற்றப்பட்டார்

ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள ஒரு விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பாகிஸ்தான் பிரஜை ஒருவர், இன்று தீயணைப்பு வீரர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு பிற்பகல் 3.04 மணிக்கு MERS 999 வழியாக அவசர அழைப்பு வந்தது என்றும், உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் இயந்திரங்களுடன் விரைந்தனர் என்றும், கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயற்பாட்டு அதிகாரி, அஹ்மட் ஷாப்ரி முகமட் ஷாம் கூறினார்.

பிற்பகல் 3.14 மணியளவில் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​அங்கு 38 வயதுடைய பாகிஸ்தானியர் ஒருவர் நான்காவது மாடியில் குதிக்க முயன்றார்.

தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவரை சமாதானப்படுத்தி, அங்கிருந்து பாதுகாப்பாக மீட்டு, அவரை மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைத்தனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here