பத்தாங் காலி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு

பத்தாங் காலி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஹருமைனி ஓமர், எந்தவித அறிவிப்புமின்றி, தொடர்ந்து ஆறு மாதங்களாக சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வுகளில் பங்கேற்காததைத் தொடர்ந்து, அவர் மாநில சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், ஜனவரி 28 முதல் அமலுக்கு வரும் வகையில் N07 பத்தாங் காலி தொகுதி இருக்கை காலியானதாக இன்று அறிவிக்கப்பட்டது.

பத்தாங் காலி சட்டமன்ற தொகுதியில் பெஜுவாங் கட்சியின் கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஹருமைனி ஓமர், இறுதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் Ng Suee Lim கூறினார்.

காலியாகிருக்கும் சட்டமன்றத் தொகுதிக்கான அறிவிப்பு விரைவில் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here