கிள்ளானில் ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

கிள்ளான், தாமன் பெட்டாலிங்கில் நேற்று மதியம் 5 பேர் கொண்ட குடும்பத்தில் ‘பாராங்கு’களைப் பயன்படுத்தி கொள்ளையடித்ததாகக் கருதப்படும் ஐந்து சந்தேக நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். முகமூடிகள் மற்றும் கையுறைகளை அணிந்திருந்த சந்தேக நபர்கள் அனைவரும் தங்கள் வாகனத்தை நிறுத்திய பின் கதவு வழியாக இரண்டு மாடி வீட்டிற்குள் நுழைந்ததாக நம்பப்படுவதாக கிள்ளான் செலாத்தான் காவல்துறைத் தலைவர் சா ஹூங் ஃபோங் கூறினார்.

வீட்டிற்குள் நுழைந்த சந்தேக நபர்கள் நான்கு குடும்ப உறுப்பினர்களின் கைகளையும் வாயையும் கட்டி இரண்டு அறைகளுக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளியுள்ளனர். பாதிக்கப்பட்ட மற்றொருவர் வயது காரணமாக கட்டப்படவில்லை.

பல சந்தேக நபர்கள் 45 வயதான ஒரு பெண்ணின் மூக்கு மற்றும் உடலிலும் தாக்கினர், அதற்கு முன்பு ஒரு பாராங்கின் பின்புறத்தால் தலையில் தட்டினர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சந்தேக நபர்கள் அறையை சூறையாடி பின் கதவு வழியாக RM4,000 ரொக்கம், சுமார் RM20,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஐந்து மொபைல் போன்களுடன் தப்பிச் சென்றதாக சா கூறினார்.

பாதிக்கப்பட்ட  ஐந்து பேரும் 38 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் என அவர் கூறினார். சாவின் கூற்றுப்படி, கிள்ளான், தாமான் டேசாவான் என்ற இடத்தில் ஒரு சந்தில்  தப்பிச் செல்லும் வாகனம் பற்றிய தகவலை போலீசார் பெற்றனர். சந்தேக நபர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். காரின் பதிவு எண்ணை சோதனை செய்ததில் அது போலியானது என தெரியவந்தது. முன்னதாக, முகமூடி அணிந்த கும்பல் ஒரு வீட்டை விட்டு வெளியேறி காரில் ஏறுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here