கிளாந்தானிலுள்ள 31 உணவகங்கள் மெனு ரஹ்மாத் திட்டத்தின் கீழ் பங்களிப்பு

கிளாந்தானில் இதுவரை மொத்தம் 31 உணவகங்கள் மெனு ரஹ்மாத் திட்டத்தின் கீழ் பங்கேற்றுள்ளதாக, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் கிளாந்தான் மாநில இயக்குனர், அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.

இதில் கோத்தா பாரு, பாசீர் மாஸ் மற்றும் தும்பாட் உள்ளிட்ட பல மாவட்டங்களிலுள்ள உணவகங்களை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

கிளாந்தானில் உள்ள பல உணவகங்களின் மெனுக்கள் RM5 க்குக் குறைவாக விற்கப்பட்டாலும், அவ்வுணவகங்கள் இன்னும் மெனு ரஹ்மாத் திட்டத்தில் சேரவில்லை. அதுபோன்ற உணவகங்களை மெனு ரஹ்மாத் திட்டத்தில் இணைய தனது துறை வரவேற்கிறது என்று அவர் கூறினார்.

“அவ்வாறு மெனு ரஹ்மாத் திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, KPDN போர்ட்டலில் காட்டப்படும் கடைகளின் பட்டியலைக் கொண்டு அவர்களின் கடைகளை நாங்கள் விளம்பரப்படுத்துவோம், இதனால் மக்கள் எளிதாக அவ்வுணவகங்களை அணுக முடியும் என்றார்.

“இருப்பினும், ரஹ்மா மெனுவை வழங்கும் உணவகங்களின், அனைத்து மெனுக்களும் RM5 மற்றும் அதற்கும் குறைவான விலையில் விற்கப்படுகின்றன என்று அர்த்தமில்லை, மாறாக அவ்வுணவகத்தின் ஒரு சில மெனுக்கள் மட்டுமே அந்த மெனு ரஹ்மாவின் கீழ் விற்கப்படும்.

“ஏனென்றால், இந்த திட்டத்தில் பங்கேற்கும் உணவகங்கள் RM5 இன் கீழ் அனைத்து மெனுக்களையும் வழங்குகின்றன என்று பலர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

“மெனு ரஹ்மாவில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், KPDN இன் முகநூல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பலாம் என்று அவர் கூறினார்.

கிளாந்தானுக்கான மெனு ரஹ்மா திட்டத்தை KPDN இன் அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் வரும் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here