மோட்டார் சைக்கிள் மற்றும் லோரியை உட்படுத்திய விபத்தில் 10 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

ஜோகூரின் ஜாலான் பெர்சியாரான் தஞ்சாங், தம்போயில் நேற்று மோட்டார் சைக்கிள் மற்றும் லோரியை உட்படுத்திய சாலை விபத்தில், 10 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கெம்பாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கை தளபதி, மூத்த தீயணைப்பு அதிகாரி II, வான் நோர் அஃபெண்டி வான் யூசூப் தெரிவித்தார்.

மாலை 4.47 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, 10 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர், அங்கு யமஹா LC மோட்டார் சைக்கிள் மற்றும் மிட்சுபிஷி ஃபுசோ லோரி ஆகியவை மோதி, விபத்துக்குள்ளாகியிருந்தன.

“இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய முகமட் ஷஹரில் அப்துல்லா, 38, ஹப்சா ஜைலானி, 41 மற்றும் முஹமட் டேனி லுக்மான் நைம் அப்துல்லா, 10, ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் லாரி ஓட்டுநர் ஃபைசி முகமட் ஃபுவாட் டான், 30, எந்தக்காயமும் ஏற்படவில்லை,” என்று அவர் கூறினார்.

உயிரிழந்த மூவரின் உடல்களும் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று வான் நோர் அஃபெண்டி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here